தாமதிக்காமல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க இஸ்மாயில் சப்ரிக்கு MACC உத்தரவு!

top-news

ஏப்ரல் 10,

சொத்துக் குவிப்பு ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணையில் முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் தாமதப்படுவதாக வெளிவந்த செய்தி உண்மை தான் என லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki இன்று உறுதிப்படுத்தினார். முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob முழுமையாக விசாரணைக்கு ஒத்துழைத்தாலும் முக்கிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியதாகவும் அதற்கானக் கால அவகாசமும் வழங்கப்பட்டிருப்பதாகவும் Tan Sri Azam Baki தெரிவித்தார்.

Datuk Seri Ismail Sabri Yaakob கோரியபடி இன்னும் 2 வாரங்களில் அவர் சமர்ப்பிக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்க தவறினால் மீண்டும் விசாரணைக்காக Datuk Seri Ismail Sabri Yaakob அழைக்கப்படுவார் என்றும் Tan Sri Azam Baki தெரிவித்தார். முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு கேள்விகளுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டாலும் அது போதவில்லை என்பதால் இந்த கால அவகாசம் அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தாமதிக்காமல் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அவர் ஆவணங்களைச் சமர்ப்பித்தால் அவரை மீண்டும் விசாரணைக்கு அழைக்க வேண்டிய அவசியம் இருக்காது என லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki விளக்கமளித்தார்.

Bekas Perdana Menteri, Datuk Seri Ismail Sabri Yaakob, diberi tempoh tambahan dua minggu oleh SPRM untuk menyerahkan dokumen penting berkaitan siasatan kes rasuah. Sekiranya gagal, beliau akan dipanggil semula untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *