கணவருடன் வாக்குவாதம்! 4 ஆவது மாடியிலிருந்து மனைவி விழுந்து படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 30 Mar, 2025
மார்ச் 30,
அடுக்குமாடிக் குடியிருப்பின் 4 ஆவது மாடியிலிருந்து இல்லத்தரசி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இன்று காலை 8 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மலாக்கா மத்திய மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். 4 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த 35 வயது இல்லத்தரசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
காலை 7.30 மணிக்குக் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பின்னர் கணவர் குளித்துக் கொண்டிருக்கும் போது காலை 8 மணிக்கு அவர் வீட்டின் ஜன்னலிருந்து கழே விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைக்காக 43 வயது கணவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மலாக்கா மத்திய மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார்.
Seorang wanita berusia 35 tahun cedera parah selepas terjatuh dari tingkat empat sebuah pangsapuri di Melaka. Insiden berlaku selepas pertengkaran dengan suaminya. Polis telah menahan suaminya yang berusia 43 tahun untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *