சரிந்த பாலம்! 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

- Sangeetha K Loganathan
- 20 Apr, 2025
ஏப்ரல் 20,
தாப்பாவிலிருந்து சுங்காய் செல்லும் சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்தததில் 100க்கும் மேற்பட்ட Sultan Azlan Shah போலிதெக்னிக் மாணவர்கள் வெளியேற முடியாமல் சிக்கியதாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். இச்சம்பவம் நேற்றிரவு 10.46 மணிக்கு நிகழ்ந்ததாகவும் உடனடியாக 8 பேர் கொண்ட மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
பாலம் இடிந்து விழுந்ததால் Sultan Azlan Shah போலிதெக்னிக் மாணவர்களும் Kampung Tisong குடியிருப்புப் பகுதியிலிருந்த 39 முதியவர்களும் 16 குழந்தைகளும் 17 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் வெளியேற முடியாமல் சிக்கியிருப்பதாகவும் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். மாற்று பாதைகளை அமைக்கப்பட்டு வருவதாகவும் முதற்கட்டமாக பெரியவர்களையும் குழந்தைகளையும் படகு மூலமாக மீட்கப்பட்டிருப்பதாகவும் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
Sebuah jambatan runtuh di jalan Tapah-Sungai menyebabkan lebih 100 orang termasuk pelajar Politeknik Sultan Azlan Shah, warga emas dan kanak-kanak terkandas. Operasi menyelamat dijalankan dengan menggunakan bot dan laluan alternatif sedang disediakan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *