125 வெளிநாட்டினர்களைத் தாய்நாட்டு அனுப்பி வைத்த குடிநுழைவுத் துறை!

top-news

மார்ச் 11,

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 125 வெளிநாட்டினர்கள் நேற்று அவர்களின் தாய்நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருநப்பதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் சிறை தண்டனைக்குப் பின்னர் உடனடியாக அவரவர் தாய்நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த 50 பேர், பாக்கிஸ்தானைச் சேர்ந்த 21 பேர், மியன்மாரைச் சேர்ந்த 19 பேர், இந்தியாவைச் சேர்ந்த 12 பேர், பங்களாதேஷைச் சேர்ந்த 10 பேர், தாய்லாந்தைச் சேர்ந்த 8 பேர், கம்போடியாவைச் சேர்ந்த மூவர், இலங்கையைச் சேர்ந்த இருவர் என மொத்தம் 125 பேர் அவர்களின் சொந்த செலவில் அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் சம்மந்தப்பட்ட 125 பேரும் மீண்டும் மலேசியாவிற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

Depot Imigresen Pekan Nenas memindahkan 125 tahanan dari pelbagai negara ke negara asal melalui KLIA, Pasir Gudang, dan Stulang Laut. Kesemua tahanan telah disenarai hitam dan tidak dibenarkan masuk semula ke Malaysia. Jabatan Imigresen menasihati urusan dibuat tanpa orang tengah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *