போக்குவரத்து விதிமீறலுக்காக 2 நாள்களில் 482 சம்மன்கள்!

- Sangeetha K Loganathan
- 10 Mar, 2025
மார்ச் 10,
கடந்த 2 நாள்களில் போக்கரத்து விதிகளை மீறிய வாகனமோட்டிகளுக்கு மொத்தம் 482 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக்காவல் துறை தலைவர் DATUK KUMAR MUTHUVELU தெரிவித்தார். ஜொகூரின் முக்கிய சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மது போதையில் வாகனங்களைச் செலுத்திய 28 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 24 முதல் 70 வயதினர் என்றும் DATUK M KUMAR தெரிவித்தார்.
மது போதையில் வாகனத்தைச் செலுத்துவது, சமிஞ்சை விளக்குகளில் நிறுத்தாமல் செல்லுதல், போன்ற போக்குவரத்து விதிமீறல்களால் அதிகமானச் சாலை விபத்துகள் ஏற்படுவதால் மது போதையில் வாகனத்தைச் செலுத்தியவர்களைக் கைது செய்ததாகவும், அவர்களை நீதிமன்ற விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீதானக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறையும், RM30,000 அபராதமும் விதிக்கப்படலாம் என ஜொகூர் மாநிலக்காவல் துறை தலைவர் DATUK KUMAR MUTHUVELU தெரிவித்தார்.
Polis Johor mengeluarkan 482 saman trafik dalam dua hari serta menahan 28 pemandu mabuk dalam operasi jalan raya. Mereka berusia 24 hingga 70 tahun dan berdepan hukuman penjara dua tahun serta denda RM30,000 jika disabitkan kesalahan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *