PUTRA HEIGHTS வெடிப்பில் வாகனங்களுக்கு 163 மாற்று ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது! JPJ NEGARA!

- Sangeetha K Loganathan
- 07 Apr, 2025
ஏப்ரல் 7,
PUTRA HEIGHTS எரிவாயு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாகனங்கள் சம்மந்தப்பட்ட ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், பேரிடர் நிவாரண முறைமையில் இலவசமாக ஆவணங்களைப் பெற்று கொள்ளலாம் என சாலை போக்குவரத்து ஆணையமான JPJ வலியுறுத்திய நிலையில் முதற்கட்டமாக 163 ஆவணங்கள் கட்டணமின்றி வழங்கப்பட்டிருப்பதாக அதன் தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார்.
வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு ஆவணங்கள், வாகனத்தின் ஆவணங்கள் என முக்கியமான ஆவணங்கள் எந்தவொரு கட்டணமுமின்றி இலவசமாக வழங்கப்பட்டிருப்பதாகவும் மேலும் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் விண்ணப்பம் செய்யாமல் இருப்பதால் ஒரு சிலரை அடையாளம் கண்டு அவர்களின் ஆவணங்களும் முறையாக வழங்கப்பட்டு வருவதாகவும் சாலை போக்குவரத்து ஆணையமான JPJ தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார்.
JPJ telah mengeluarkan 163 dokumen kenderaan secara percuma kepada mangsa insiden letupan gas di Putra Heights. Mereka yang terjejas tidak perlu memperbaharui dokumen kenderaan dan boleh memohon melalui saluran bantuan bencana yang disediakan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *