தீயில் கருகிய வீடு! மூச்சுத் திணறால் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

top-news

ஏப்ரல் 9,

பக்கத்து வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்ட ஆடவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோலா திரங்கானுவில் உள்ள Kampung Gelong Gajah குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பொது அண்டை வீட்டாருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியதாகவும் சம்பவ இடத்திலிருந்த தீயணைப்பு அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் Kuala Terengganu தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் இயக்குநர் Thoyyibah Taib தெரிவித்தார்.

நேற்றிரவு 10.30 மணிக்குத் தீ விபத்து குறித்து அவசர அழைப்பைப் பெற்றதும் 21 தீயணைப்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் Kuala Terengganu தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் இயக்குநர் Thoyyibah Taib தெரிவித்தார். தீயினால் பாதிக்கப்பட்ட வீட்டில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் சிக்கியிருந்ததாகவும் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அதிகாலை 1 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மூச்சுத் திணறல் ஏற்பட்ட ஆடவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என Kuala Terengganu தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் இயக்குநர் Thoyyibah Taib தெரிவித்தார்.

Kebakaran di Kampung Gelong Gajah, Kuala Terengganu menyebabkan seorang jiran mengalami sesak nafas ketika membantu menyelamatkan mangsa. Kesemua sembilan mangsa terselamat. Tiada kematian dilaporkan dan kebakaran dikawal sepenuhnya pada 1 pagi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *