கெடாவில் கோயில்களுக்கு அனுமதியில்லை! கெடா மாநில அரசு திட்டவட்டம்!

- Sangeetha K Loganathan
- 23 Apr, 2025
ஏப்ரல் 23,
தனியார் அல்லது அரசு நிலங்களில் கட்டப்பட்டிருக்கும் கோயில்கள் தொடர்பானப் புகார்கள் அதிகரித்து வருவதால், இஸ்லாம் அல்லாத புதிய கோயில்களைக் கட்டுவதற்கான அனுமதிகள் கட்டம் கட்டமாகக் குறைக்கப்பட்டு வருவதாகக் கெடா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Wong Chia Zhen தெரிவித்தார். மாநில அரசுக்குச் சொந்தமானப் பொது இடங்களில் கட்டப்படும் கோயில்கள் மீது கெடா மாநில அரசு நிதானமாகவும் சட்டப்படியும் முடிவெடுக்கவிருப்பதாக Wong Chia Zhen தெரிவித்தார்.
கெடாவின் கோலா மூடா, கூலிம் ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள கோயில்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதிப்படுத்தினார். தற்போது பொது இடங்களில் கட்டப்பட்டிருக்கும் கோயில்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் புதிய கோயில்கள் கட்டுவதற்கான அனுமதிகள் வழங்கப்படாது என Wong Chia Zhen தெரிவித்தார். இணக்கமானப் பேச்சு வார்த்தையின் மூலமாக இப்பிரச்சனையைத் தீர்க்க மாநில அரசு முடிவெடுத்துள்ளதாகவும் இது தொடர்பாக மேலதிக விசாரணையை மாவட்டக் காவல் அதிகாரிகளும் பொதுப்பணித்துறையினரும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kerajaan Negeri Kedah menegaskan tidak akan meluluskan pembinaan kuil baharu di tanah kerajaan atau persendirian buat masa ini, berikutan peningkatan aduan. Tindakan undang-undang akan diambil terhadap kuil yang dibina secara haram di daerah tertentu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *