இரு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் பலி! தம்பதியர் படுகாயம்!

top-news

ஏப்ரல் 19,

சமிஞ்சை விளக்கை மீறி சென்ற வாகனம் மற்றொரு வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் பலியானதுடன் தம்பதியர் இருவர் படுகாயம் அடைந்தனர். இரவு 11.54 மணிக்குப் பின்துலு சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விபத்தில் பலியானவர்கள் 34 வயது YIU SIEW LEE என்றும் 44 வயது JANAM AMPAR என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த இருவரும் விபத்துக்குக் காரணமானவர்கள் என தெரிய வந்துள்ளது. 

மற்றொரு வாகனத்திலிருந்தவர் படுகாயம் அடைந்ததாகவும், உள்ளூர் ஆண் என்றும் மற்றொருவர் வெளிநாட்டுப் பெண் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையைத் தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

Dua wanita maut manakala dua lagi parah selepas kereta dinaiki mereka dirempuh pikap di lampu isyarat Jalan Paragon, Bintulu. Mangsa maut dikenali sebagai Yiu Siew Lee dan Janam Ampar. Punca kejadian masih dalam siasatan polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *