விபத்தில் 2 முதியவர்கள் பலி! ஒருவர் படுகாயம்!

top-news

மார்ச் 23,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 55 வயது 73 வயது இரு முதியவர்களும் பலியான நிலையில் 74 வயது மற்றொரு முதியவர் படுகாயம் அடைந்ததாக மாரான் மாவட்டக் காவல் ஆணையர் Wong Kim Wai தெரிவித்தார். பிற்பகல் 1.20 மணிக்கு செனோரிலிருந்து மாரான் செல்லும் சாலையில் விபத்து ஏற்பட்டதாக அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.

மழையின் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து சறுக்கி மரத்தில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தில் 55 வயதான Mohd Rahinuddin Ibrahim எனும் முதியவர் உயிரிழந்ததாகவும் 73 வயதான Abd Aziz Othman எனும் முதியவர் சிகிச்சை பலனின்றி தெமர்லோ மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் 74 வயது மற்றொரு முதியவர் படுகாயம் அடைந்த நிலையில் தெமர்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாரான் மாவட்டக் காவல் ஆணையர் Wong Kim Wai தெரிவித்தார்.

Dua warga emas maut dan seorang lagi cedera parah selepas kenderaan mereka hilang kawalan dan melanggar pokok di Maran. Kemalangan dipercayai berlaku akibat jalan licin akibat hujan. Mangsa yang cedera sedang menerima rawatan di Hospital Temerloh.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *