MASJID INDIA கோயில் விவகாரத்தில் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடாதீர்! அமைச்சர் எச்சரிக்கை!

- Sangeetha K Loganathan
- 27 Mar, 2025
மார்ச் 27,
தலைநகரில் அமைந்துள்ள Dewi Sri Pathrakaliaman கோயில் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதற்குப் பின்னனியில் பலதரப்பட்ட கட்டுக் கதைகளை அவிழ்த்துவிட வேண்டாம் என கூட்டரசு வளாக அமைச்சர் Datuk Seri Dr Zaliha Mustafa இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கோயிலுக்கு நிலம் வழங்கப்பட்டிருப்பது சட்டத்திற்கு எதிரானது என பலரும் கருத்துகள் தெரிவிப்பதாகவும் கோயிலை நகர்த்துவதற்காகக் கோயில் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் பல்வேறு கதைகள் பின்னப்பட்டிருப்பது தேவையற்ற செயல் என அவர் தெரிவித்தார்.
கோயில் நிர்வாகத்திற்கும் நிலத்தின் உரிமையாளருக்கும் இடையில் சுமூகமான முறையில் இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கிறது. அமைச்சராக நான் சட்டத்தை மதித்தும் சக மதத்தின் உணர்வை மதிக்கும் மனிதராகவும் இந்த விவகாரத்தில் தாம் ஈடுபட்டதாகவும் சரி தவறு என்பதையும் கடந்து சட்ட ஒழுங்கையும் நில உரிமையையும் மத நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்த்து வைத்ததாகக் கூட்டரசு வளாக அமைச்சர் Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார்.
இந்த Dewi Sri Pathrakaliaman கோயில் இடமாற்றம் விவகாரத்தில் கோயில் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் 20 லட்சம் ரிங்கிட் கோயில் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் சம்மந்தப்படதாக மூன்றாம் தரப்பினர்கள் பஞ்சாயத்தை நடத்தியதாகவும் வெளிவரும் செய்திகளில் எந்தவோர் உண்மையுமில்லை என்றும் Dewi Sri Pathrakaliaman கோயில் விவகாரம் சட்டத்தின்படியும் உணர்வின்படியும் தீர்வுக் காணப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார்.
Menteri Datuk Seri Dr Zaliha Mustafa menegaskan pemindahan kuil Dewi Sri Pathrakaliaman dilakukan secara sah tanpa tekanan. Beliau menggesa agar spekulasi dihentikan, menafikan tuduhan pemberian RM2 juta dan campur tangan pihak ketiga dalam isu ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *