சிலாங்கூரில் பல பகுதிகளில் திடீர் வெள்ளம்....

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஏப்ரல் 23: இன்று அதிகாலை முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து சிலாங்கூரில் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

சுங்கை பூலோ, பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயா ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

எண்பத்தாறு வீடுகள் பாதிக்கப்பட்டன, இருப்பினும் யாரும் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.

சுங்கை பூலோவின் கம்போங் பயா ஜராஸ் ஹிலிரில் 80 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், நீர் மட்டம் மூன்று அடியை எட்டிய நிலையில் நீர் குறையத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கம்போங் பாரு சுங்கை பூலோவில், ஆறு வீடுகள் இரண்டு அடி நீரில் மூழ்கின. ஆனால் நீர் மட்டம் குறைந்து வருவதால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற மறுத்துவிட்டனர்.பெர்சியாரன் டமாய், கம்போடாங் கெனாங்கன் சுபாங் ஜெயாவில் ஒரு கார் இரண்டு அடி நீரில் சிக்கியுள்ளதாக அஹ்மத் முக்லிஸ் கூறினார்.இருப்பினும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஜாலான் PJU 1A/46 இல் வெள்ளம் ஐந்து அடிக்கு உயர்ந்ததை அடுத்து, 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை பொதுமக்கள் மீட்டதாக அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

ஒரு ஹோண்டா வாகனமும் வெள்ளத்தில் சிக்கியது. ஆனால் சம்பவ இடத்தில் தண்ணீர் முழுமையாக வடிந்துவிட்டது என்று அவர் கூறினார்!

Hujan lebat sejak awal pagi sebabkan banjir kilat di beberapa kawasan Selangor seperti Sungai Buloh, Petaling Jaya dan Subang Jaya. 86 rumah terjejas, tiada pemindahan atau kematian dilaporkan. Paras air kini semakin surut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *