சீன அதிபர் வருகை! 17 முதன்மைச் சாலைகள் மூடப்படும்!

- Sangeetha K Loganathan
- 13 Apr, 2025
ஏப்ரல் 13,
சீன அதிபர் Xi Jin Ping மலேசியாவுக்கு வருவது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 17 வரையில் தலைநகரின் முக்கிய சாலைகள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரின் முக்கிய சாலைகள் 30 முதல் 45 நிமிடங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கு, புத்ராஜெயா பகுதிகளிலுள்ள 17 சாலைகளின் அட்டவணையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. ELITE, MEX, SUKE, NPE, KESAS, SMART TUNNEL என 17 சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அம்சங்களுக்காக இந்த சாலைகள் 30 முதல் 45 நிமிடங்கள் மூடப்படும் என்றும் முழுமையானப் பாதுகாப்பை வழங்குவதில் காவல்துறைக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படியும் காவல்துறை கேட்டுக் கொண்டது.
Susulan lawatan Presiden China Xi Jinping ke Malaysia, 17 jalan utama di sekitar Lembah Klang dan Putrajaya akan ditutup secara berperingkat antara 15 hingga 17 April selama 30 hingga 45 minit bagi tujuan keselamatan, menurut pihak polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *