விபத்தில் ஆடவர் பலி! உதவ வந்த நபரும் மற்றொரு கார் மோதி பலி!

- Sangeetha K Loganathan
- 14 Apr, 2025
ஏப்ரல் 14,
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளோட்டிக்கு உதவ முயன்ற ஆடவரைப் பின்னிருந்து வந்த வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டியும் உதவுவதற்காகச் சென்ற ஆடவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2.10 மணியளவில் ஜொகூர் பாருவிலிருந்து Kota Tinggi செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையிலிருந்து விலகி விபத்துக்குள்ளான நிலையில் பின்னிருந்து வந்த 37 வயது ஆடவர் மோட்டார் சைக்கிளோட்டிக்கு உதவ முயற்சித்த போது பின்னிருந்து வந்த BMW கார் இருவரையும் மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Seri Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார்.
பின்னிருந்து வந்த BMW வாகனமோட்டி மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தியதால் பொதுமக்களால் சுற்றி வலைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக Seri Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார். 25 வயது BMW வாகனமோட்டி சிராய்ப்புக் காயங்களுடன் தப்பிய நிலையில் 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் Seri Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார்.
Seorang lelaki maut selepas dirempuh kereta mewah ketika cuba membantu mangsa kemalangan motosikal di Johor Bahru. Pemandu kereta didapati memandu di bawah pengaruh alkohol dan telah ditahan untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *