சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பட்டறை முறியடிப்பு!பினாங்கு மாநகர் மன்றம் நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

பினாங்கு, ஏப். 17-

பினாங்கு மாநிலத்தின் தென்மேற்கு மாவட்டத்தில் உரிமம் (லைசென்ஸ்) இல்லாது சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்த மோட்டார் சைக்கிள் பட்டறையை.
இங்கிருக்கும் மாநகர் மன்றத்தின் உரிமப் பிரிவு அதிகாரிகள் கட்டாய அமலாக்கத் துறையினரின் துணையுடன் மூடி முத்திரை இட்டனர்.

இந்த அதிரடி நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட பட்டறையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பலவற்றையும் அவற்றின் பற்பல உதிரி பாகங்களையும், பல்வேறு உபகரணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சோதனையின் போது சம்பந்தப்பட்ட பட்டறை இங்குள்ள ஒரு குடியிருப்பு இல்லம் என்பதும் கண்டறியப்பட்டது.இந்தப் பட்டறைக்கு கொண்டு வரப்படும் மோட்டார் சைக்கிள்கள் போக்குவரத்துக்குஇடையூறாக இங்கிருக்கும் நடை பாதைகளில் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விவகாரம் குறித்து, அண்டை வீட்டுக்காரர்கள் புகார் கூறியதை தொடர்ந்து, மாநகர் மன்றம் இப்பிரச்சினைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

1953ஆம் ஆண்டின் மாநகர் மன்றத்தின் பறிமுதல் சட்ட விதியின் படியும், 1976ஆம் ஆண்டின் சாக்கடை மற்றும் கட்டடப் பிரிவு விதிமுறையின் பேரிலும் இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்ட வேளையில், பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் யாவும், மாநகர் மன்றத்தின் பொருள் வைப்புக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

Di Penang, pihak berkuasa majlis bandar raya telah menutup sebuah bengkel motosikal yang beroperasi secara haram tanpa lesen di daerah barat daya. Beberapa motosikal, alat ganti, dan peralatan disita dalam operasi tersebut selepas aduan dari jiran mengenai penyalahgunaan ruang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *