வெள்ளம்-நேற்று காலை வரை ஆறு நிவாரண மையங்களில் 1,109 பேர் தஞ்சம்!

- Muthu Kumar
- 13 Apr, 2025
ஷா ஆலம், ஏப். 13-
ஷா ஆலம், கிள்ளான் மற்றும் சுபாங் ஜெயாவில் உள்ள ஆறு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் நேற்று காலை 9.15 மணி நிலவரப்படி 300 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,104 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.
ஷா ஆலம் மாவட்டத்தில் உள்ள மூன்று நிவாரண மையங்களில் மொத்தம் 653 பேரும் கிள்ளான் மாவட்டத்திலுள்ள இரண்டு மையங்களில் 383 பேரும் தங்கியுள்ள வேளையில் சுபாங் ஜெயா மாவட்டத்தில் திறக்கப்பட்ட ஒரு துயர் துடைப்பு மையத்தில் 68 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மொத்த எண்ணிக்கையில் 715 பெரியவர்களும் பெண்களும் அடங்குவர்.
எஞ்சியோர் சிறார்கள் மற்றும் குழந்தைகளாவர் என்று சமூக நலத்துறையின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் தெரிவித்து உள்ளது.முன்னதாக, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்கு ஷா ஆலம், செக்சன் 28, டேவான் கெனாங்கா, செக்சன் 16 தேசியப் பள்ளி மற்றும் சுபாங் ஜெயா மாவட்டத்தில் உள்ள புத்ரா ஹைட்ஸ், டேவான் கமெலியாவில் நிவாரண மையங்கள் திறக்கப்படும் என்று பேரிடர் மேலாண்மைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி அறிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை நீடித்த கடும் மழை காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
Shah Alam, Klang dan Subang Jaya dilanda banjir kilat akibat hujan lebat. Seramai 1,104 mangsa daripada 300 keluarga ditempatkan di enam pusat pemindahan sementara. Tiga daerah terjejas dengan kebanyakan mangsa terdiri daripada golongan dewasa dan kanak-kanak.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *