நில அமிழ்வால் மூடப்பட்ட கேமரன் செல்லும் சாலை!

- Sangeetha K Loganathan
- 16 Mar, 2025
மார்ச் 16,
குவா மூசாங்கிலிருந்து கேமர் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள நில அமிழ்வால் சம்மந்தப்பட்ட சாலை மூடப்படுவதாக GUA MUSANG மாவட்டக் காவல் ஆணையர் SIK CHOON FOO தெரிவித்தார். சுமார் 7 மீட்டர் பரப்பளவில் நில அமிழ்வு ஏற்பட்டிருப்பதால் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
குவா மூசாங்கிலிருந்து கேமரன் மலைக்குச் செல்லும் சாலையின் KAMPUNG JEKJOK அருகில் சுமார் 6 மீட்டர் ஆழத்திற்கு இந்த நில அமிழ்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையின் காரணமாக இந்த நில அமிழ்வு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக GUA MUSANG மாவட்டக் காவல் ஆணையர் SIK CHOON FOO தெரிவித்தார்.
Lubang benam berlaku di Kilometer 78 Jalan Gua Musang-Lojing berhampiran Kampung Jekjok, menyebabkan laluan ditutup sepenuhnya. Lubang sedalam enam meter ini dipercayai berpunca daripada hujan berterusan. Pengguna jalan dinasihatkan menggunakan laluan alternatif ke Cameron Highlands.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *