மகாதீர் குட்டி விவகாரம்! மகாதீருக்கு நீதிபதி உத்தரவு!

- Sangeetha K Loganathan
- 16 Apr, 2025
ஏப்ரல் 16,
துணைப்பிரதமரும் அம்னோ தலைவருமான Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தன்னை அவமரியாதைச் செய்ததாகவும் இல்லாத போலி ஆவணங்களைக் கொண்டு தம்மை MAHATHIR KUTTY என அடையாளப்படுத்தியதாகவும் முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad தொடுத்த வழக்கிற்குச் சம்மந்தப்பட்ட ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் சம்மந்தப்பட்ட காணொலியின் உண்மை தன்மையை உறுதிப்படுத்தும்படி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மகாதீர் நீதிமன்றத்தில் வழங்கிய 2 காணொலிகளுக்கும் தகுந்த விளக்கத்தை அளிக்க நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராகும்படியும் சம்மந்தப்பட்ட காணொலி தொடர்பாக மகாதீர் விளக்கமளிக்க கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் நீதிபதி Gan Techiong உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் சம்மந்தப்பட்ட 2 காணொலிகளும் ஒளிபரப்பிய பின்னர் சம்மந்தப்பட்ட காணொலியைச் செயற்கை நுண்ணறிவு போன்ற திருத்தச் சீர்கள் ஏதும் செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தொழில்நுட்ப நிபுணர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், சம்மந்தப்பட்ட காணொலியின் நம்பகத்தன்மையை உறுதிச் செய்த பின்னர் மேலதிக விசாரணை மே 14 ஆம் திகதி நடத்தப்படும் என்றும் என்றும் உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையர் Gan Techiong உத்தரவிட்டார்.
Mahkamah Tinggi mengarahkan Tun Dr Mahathir Mohamad untuk memberikan penjelasan mengenai dua video yang mendakwa Zahid Hamidi menggunakan istilah "Mahathir Kutty", serta mengesahkan ketulenan video tersebut melalui pakar sebelum siasatan lanjut pada 14 Mei.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *