மலேசியாவுக்கும் சீனாவுக்கும் 31 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! அன்வார் மகிழ்ச்சி!

- Sangeetha K Loganathan
- 21 Apr, 2025
ஏப்ரல் 21,
சீன அதிபர் Xi Jinping மலேசியா வருகையால் மலேசியாவுக்கு ஆதரவான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக பிரதமர் அன்வார் தெரிவித்தார். மலேசியா முன்வைத்த 31 ஒப்பந்தக் கோரிக்களையும் சீனா ஏற்றுக் கொண்டதுடன் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாகவும் சீன அதிபர் Xi Jinping வாக்குறுதி அளித்துள்ளதாக அன்வர் தெரிவித்தார். Xi Jinping வருகை மலேசியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை வளப்படுத்தும் என தாம் நம்புவதாக இன்று அன்வார் தெரிவித்தார். மலேசிய வரலாற்றில் உலக வல்லரசு நாடுகளுடன் கையெழுத்திடப்பட்ட அதிக ஒப்பந்தமாக இது இருக்கும் என அன்வார் நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.
முக்கியமாகப் பொருளாதாரம், அனைத்துலக வர்த்தகம், உள்நாட்டுக் கட்டமைப்பு மேம்பாடு, இருவழி கூட்டுப் பாதுகாப்பு, விவசாயப் பங்களிப்பு, சுற்றுலா பயணிகளின் கடப்பிதழ் முறைமைகள் என மலேசியாவுக்குச் சாதகமானப் பல்வேறு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளதாகவும் இருவழி பயனாக இரு நாடுகளுக்கும் முக்கிய பங்களிப்பை அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் அமைந்துள்ளதாகவும் Datuk Seri Anwar Ibrahim நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Perdana Menteri Anwar Ibrahim menyatakan kegembiraannya atas kejayaan menandatangani 31 perjanjian persefahaman antara Malaysia dan China sempena lawatan Presiden Xi Jinping, melibatkan kerjasama dalam ekonomi, infrastruktur, pertanian, keselamatan, pelancongan dan perdagangan antarabangsa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *