போலி முதலீட்டில் RM 26 லட்சம் பறிகொடுத்த மூதாட்டி!

- Sangeetha K Loganathan
- 13 Apr, 2025
ஏப்ரல் 13,
அதிக லாபம் பெற நினைத்து இல்லாத முதலீட்டில் RM 26 லட்சம் ரிங்கிட்டை 72 வயது மூதாட்டி இழந்ததாக PAHANG மாநிலக் காவல் துறைத் தலைவர் DATUK SERI YAHAYA OTHMAN தெரிவித்தார். முகநூல் மூலமாக முதலீட்டு விளம்பரத்தைக் கண்டதாகவும் அரசு அங்கீகரம் பெற்ற முத்திரைகளுடன் முதலீட்டு நிறுவனம் இருந்ததால் நம்பிக்கையுடன் பணத்தை முதலீடு செய்ததாகப் பணத்தைப் பறிகொடுத்த 72 வயது மூதாட்டி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 18 முதல் டிசம்பர் 9 வரையில் வெ்வ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 60 முறை பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகவும் லாபம் பெற்ற பணத்தைத் திரும்பப் பெறும் போது அப்படியான நிறுவனம் போலியானது என தெரிய வந்ததும் ஏமாற்றப்பட்ட மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக PAHANG மாநிலக் காவல் துறைத் தலைவர் DATUK SERI YAHAYA OTHMAN தெரிவித்தார்.
Seorang wanita warga emas berusia 72 tahun kerugian RM2.6 juta selepas terpedaya dengan pelaburan palsu yang diiklankan melalui Facebook. Mangsa membuat 60 transaksi antara April dan Disember sebelum menyedari syarikat itu penipuan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *