காணாமல் போன முதியவர் சடலமாகக் கண்டுப்பிடிக்கப்பட்டார்!

top-news

ஏப்ரல் 22,

காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 71 வயது முதியவர் இன்று காலை 11 மணிக்கு ரப்பர் தோட்டத்தில் தனது காரில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக Baling, மாவட்டக் காவல் ஆணையர் Azmi Mokhtar தெரிவித்தார். கடந்த வெள்ளிக் கிழமை காணாமல் போன 71 வயது Eng Chin Kuang உடல் என்பதை அவரின் மகன் உறுதிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிங் மாவட்டத்தில் உள்ள Ulu Pulai ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காரிலிருந்து அவரின் உடல் சடலமாக் மீட்கப்பட்டுள்ளது.

71 வயது முதியவர் இறந்து 2 நாள்கள் ஆகியிருக்கும் என முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் சம்மந்தப்பட்ட பகுதியில் எந்தவொடு குற்றவியல் சம்பவங்கள் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும் Baling, மாவட்டக் காவல் ஆணையர் Azmi Mokhtar தெரிவித்தார். முதியவர் வாகனத்திலிருந்த பணமும் நகைகளும் அப்படியே இருப்பதால் குற்றச் சம்பவங்கள் ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லை என Baling, மாவட்டக் காவல் ஆணையர் Azmi Mokhtar உறுதிப்படுத்தினார்.

Polis daerah Baling mengesahkan mayat Eng Chin Kuang, 71, yang dilaporkan hilang, ditemui dalam keretanya di ladang getah. Tiada unsur jenayah dikesan, dan barangan peribadi mangsa masih ada dalam kenderaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *