சிலாங்கூர் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வில்லையா? நாளை மெந்திரி பெசார் தலைமையில் சிறப்புக் கூட்டம்!

- Sangeetha K Loganathan
- 20 Apr, 2025
ஏப்ரல் 20,
சிலாங்கூரில் சமீபக் காலமாக ஏற்படும் வெள்ளப் பிரச்சனைகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க நாளை முக்கிய சிறப்புக் கூட்டத்தை நடத்தவிருப்பதாகச் சிலாங்கூர் மெந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari தெரிவித்தார். வெள்ளம் ஏற்படுவதால் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் அதிகரித்துள்ளதால் அரசு நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதை உணர்ந்து நாளை மாவட்ட நகராண்மைக் கழகத்தினருடனும் வெள்ள தடுப்பு மேலான்மை வாரியத்துடனும் வடிகால் நீர்பாசனத் துறையுடனும் முக்கிய சந்திப்பை நடத்தவிருப்பதாக Datuk Seri Amirudin Shari தெரிவித்தார்.
முக்கியமாகச் சிலாங்கூரில் உள்ள சிள்ளான், ஷா அலாம் பகுதிகளில் ஏற்படும் வெள்ளம் குறித்தும் விவாதிக்கபடும் என Datuk Seri Amirudin Shari தெரிவித்தார். தற்காலிகத் தீர்வால் எநத்வோர் பயனுமில்லை என தெரிவித்த Datuk Seri Amirudin Shari நிரந்தர தீர்வுக்காக அரசாங்கம் பல்வேறு செயல்திட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாகவும் Datuk Seri Amirudin Shari தெரிவித்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் போல மீண்டும் ஏற்படாமல் இருக்க முக்கிய செயல்திட்டங்களை அமல்படுத்தவிருப்பதாகவும் Datuk Seri Amirudin Shari தெரிவித்தார்.
Menteri Besar Selangor, Datuk Seri Amirudin Shari akan mempengerusikan mesyuarat khas esok bagi mencari penyelesaian jangka panjang isu banjir yang sering melanda Selangor, khususnya di Klang dan Shah Alam, bersama agensi-agensi berkaitan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *