ம.இ.கா கட்டும் கோயில்! நிறுத்தும்படி DBKL உத்தரவு!

- Sangeetha K Loganathan
- 14 Apr, 2025
ஏப்ரல் 14,
ம.இ.கா தலைமைக் கட்டிடத்தின் அருகில் கோயில் கட்டப்பட்டு வருவதை நிறுத்தும்படி கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் வலியுறுத்தியுள்ளது. கோயில் கட்டுவதற்கான உரிமம் இல்லாமல் கோயிலைக் கட்ட வேண்டாம் என முன்னமே DBKL வலியுறுத்திய நிலையில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்த நிலையில் தற்போது DBKL இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சம்மந்தப்பட்ட கட்டுமானத்தை உடனடியாக நிறுத்தும்படியும் மீறினால் சம்மந்தப்பட்ட பகுதியிலுள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சம்மந்தப்பட்ட நிலத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்படும் என DBKL எச்சரிக்கை விடுத்துள்ளது. முறையான அனுமதிக்குப் பின்னர் கட்டுமானப் பணிகளைத் தொடரும்படி DBKL வலிறுத்தியது.
DBKL mengarahkan MIC menghentikan pembinaan kuil berhampiran ibu pejabat parti kerana tiada kelulusan rasmi. Amaran terakhir diberi, dan tindakan termasuk rampasan serta larangan masuk akan dikenakan jika arahan tidak dipatuhi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *