இளம்பெண் கடத்தல் தொடர்பில் இந்திய மாது கைது!

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், ஏப். 18-

பதின்ம வயது நிரம்பிய ஓர் இளம் பெண்ணைக் கடத்தி. 20 லட்சம் வெள்ளி பிணைப் பணம் கோரப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு உதவுவதற்காக, போலீசார் மேலும் ஒரு சந்தேகப்பேர்வழியைக் கைது செய்து 14 நாட்களுக்குத் தடுத்து வைத்துள்ளனர்.

இம்மாதம் 10ஆம் தேதி. சிரம்பானில், சிலருடன் சேர்ந்து அக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 50 வயது மதிக்கத்தக்க அந்த மாது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக, நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் அஹ்மாட் ஸாஃபிர் யூசோப்
அவரை 14 நாட்களுக்குத் தடுத்து வைக்கும் உத்தரவை, சிரம்பான் மாஜிஸ்டிரேட் ஃபைருஸ் ஷுஹாடா அம்ரான் நேற்று காலையில் வெளியிட்டார்.

அம்மாது நேற்றுமுன்தினம் புதன்கிழமை நள்ளிரவு 12.55 மணியளவில், கோலாலம்பூரின் செராசில் கைது செய்யப்பட்டதாகவும் 1961ஆம் ஆண்டு கடத்தல் சட்டத்தின் செக்ஷன் 30இன் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அஹ்மாட் ஸாஃபிர் தெரிவித்தார்.

இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேகப்பேர்வழி, கிள்ளானில் உள்ள பண்டார் புக்கிட் திங்கியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்ததாக முன்பு கூறப்பட்டது.இச்சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் அறுவர் கைது செய்யப்பட்டு இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து 14 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் 20 முதல் 31 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டது.

Polis menahan seorang lagi suspek wanita berusia 50 tahun berkaitan kes penculikan remaja perempuan di Seremban, di mana wang tebusan RM2 juta diminta. Dia ditahan reman 14 hari dan kes disiasat bawah Seksyen 3 Akta Penculikan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *