சுங்கை சிப்புட்டில் கேசவன் தோல்வி! நோவிந்தன் வெற்றி!

top-news

ஏப்ரல் 14,

நாடு முழுவதும் பி.கே.ஆர் கட்சியின் தொகுதித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் SUNGAI SIPUT தொகுதியின் பி.கே.ஆர் தொகுதியின் நடப்புத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான KESAVAN SUBRAMANIAM தோல்வியடைந்தார். சுங்கை சிப்புட் பி.கே.ஆர் தொகுதிக்கானத் தேர்தலில் கேசவனை எதிர்த்துப் போட்டியிட்ட NOVINTHEN KRISHNAN 389 வாக்குகள் பெற்று Sungai Siput பி.கே.ஆர் தொகுதித் தலைவராகப் பொறுப்பேற்றார். 

Sungai Siput நாடாளுமன்ற உறுப்பினர் KESAVAN SUBRAMANIAM 357 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். ம.இ.காவின் பாரம்பரிய நாடாளுமன்றமான Sungai Siput தொகுதியை 2008 ஆம் ஆண்டு இழந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளாகப் பி.கே.ஆர் தொகுதித் தலைவர் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று வரும் நிலையில் அடுத்த பொதுத்தேர்தலில் SUNGAI SIPUT நாடாளுமன்றத்தின் பக்கத்தான் வேட்பாளராக NOVINTHEN KRISHNAN ம.இ.காவின் தலைவரை எதிர்த்துப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dalam pemilihan PKR Cabang Sungai Siput, penyandang dan Ahli Parlimen Kesavan Subramaniam tewas kepada Novinthen Krishnan yang meraih 389 undi. Kekalahan ini membuka peluang Novinthen bertanding dalam pilihan raya umum akan datang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *