பிறை எம்பிகேகேயின் உலக பெண்கள் தினக் கொண்டாட்டம்!

top-news
FREE WEBSITE AD

பிறை, மார்ச் 11-

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் உலக பெண்கள் தினம்,வழக்கம் போல இந்த ஆண்டும் பிறை எம்பிகேகே ஏற்பாட்டில், மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பெண்களுக்காக உடற்பயிற்சி மற்றும் பல கவர்ச்சிகரமான பரிசுகளைக் கொண்ட அதிர்ஷ்டக் குலுக்கலும் நடைபெற்றன.

பிறை எம்பிகேகே தலைவரும், வட்டார சமூக சேவையாளருமான எம்.ஸ்ரீசங்கர் மற்றும் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இதில் பெண்கள் கலந்து சிறப்பித்தனர். பெண்களுக்கு முதல் வணக்கமும் மரியாதையும் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த தினம், தொடர்ந்து பிறை தொகுதியில் நடத்தப்படுமென ஸ்ரீசங்கர் கூறினார்.

இந்நிகழ்வில் செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் பொன்னுதுரை, பிறை சட்டமன்ற சேவை மையத்தின் இயக்குநர் கிருஷ்ணன் ஆகியோர் நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக பங்கேற்றனர். இறுதியாக நிகழ்வுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் ஏற்பாட்டினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Majlis Sambutan Hari Wanita Sedunia anjuran MPKK Bera berlangsung meriah dengan aktiviti senaman dan cabutan bertuah. Program diketuai M. Srisankar bersama tetamu khas, termasuk Ponnudurai dan Krishnan. Acara tahunan ini dijangka terus diadakan bagi menghargai peranan wanita dalam masyarakat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *