புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் எந்த மரணமும் நிகழவில்லை- ஓமார் கான்!

- Muthu Kumar
- 09 Apr, 2025
சுபாங் ஜெயா, ஏப்ரல் 9 :
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் மரணம் நிகழ்ந்திருப்பதாகவும், அதனைத் தாங்கள் மறைத்து விட்டதாகவும் கூறப்படுவதை சிலாங்கூர் மாநிலக் காவல் துறை மறுத்துள்ளது. மரணத்தை மறைக்கும் செயலால் எந்த நன்மையும் விளைந்து விடப்
போவதில்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ
ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
அந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை அது போலியானது என அவர் கூறினார்.உண்மையிலேயே மரணம் நிகழ்ந்தது என்றால், உடனடியாகப் போலீசில் புகார் செய்யுங்கள். அடிப்படையற்றக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தாதீர்கள் என அவர் எச்சரித்தார்.
காவல் துறை உள்பட அனைத்து துறைகளும் மிகவும் வெளிப்படையாக
நடந்து கொள்வதோடு அறிக்கை தயாரிப்பதிலும் விசாரணை
மேற்கொள்வதிலும் தனித்தனியாகச் செயல்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.இவ்விவகாரத்தில் யாரும் பாதுகாக்கப்பட மாட்டார்கள் என்று அவர் உறுதியளித்தார்.
Ketua Polis Selangor menafikan dakwaan kematian disembunyikan dalam insiden kebakaran paip gas Putra Heights. Beliau menegaskan tiada faedah menyembunyikan fakta dan menyeru agar laporan dibuat jika benar berlaku kematian. Siasatan telus dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *