சின் சியூ டெய்லி விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை!

- Shan Siva
- 16 Apr, 2025
பெட்டாலிங் ஜெயா:
சீன மொழி பத்திரிகையான சின் சியூ டெய்லியின் ஏப்ரல் 14 ஆம் தேதி பதிப்பின் முதல்
பக்கத்தில் பிறை நிலவு இல்லாமல் தேசியக் கொடியைத் தவறாக சித்தரித்த ஒரு படம்
குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த விவகாரம்
தொடர்பாக 13 புகார்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர்,அச்சு அச்சகங்கள் மற்றும் வெளியீட்டுச் சட்டம் 1984 இன்
கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தேசிய காவல்துறைத் தலைவர் ரசாருடின் ஹுசைன்
கூறினார்.
முன்னதாக,
பாஸ் இளைஞர் தலைவர் அப்னான் ஹமிமி தைப்
அசமுடின், சின் சியூ
டெய்லிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்,
அந்த படம் எளிதில் மன்னிக்க முடியாத துரோகச்
செயல் என்று கூறினார்.
மலேசியக் கொடியில் பிறை நிலவு ஒரு முக்கிய சின்னம் என்று அஃப்னான் கூறினார், ஏனெனில் அது இஸ்லாத்தை கூட்டமைப்பின் மதமாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இது கூட்டாட்சி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்!
Polis memulakan siasatan terhadap akhbar Sin Chew Daily kerana menerbitkan gambar Jalur Gemilang tanpa bulan sabit. Sebanyak 13 laporan polis dibuat dan siasatan dijalankan di bawah Akta Mesin Cetak 1984. PAS gesa tindakan tegas diambil.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *