உதவித் தலைவர் பதவிக்குப் போட்டி! - ஃபாமி ஃபாட்ஸில்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 17: வரும் மே 24 ஆம் தேதி நடைபெறவிருக்கும் PKR கட்சி தேர்தலில் தாம் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாக கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவித்துள்ளார்.

தலைவர்கள் சிலருடனும் கட்சி சகாக்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை தாம் எடுத்ததாக தகவல் தொடர்புத்துறை அமைச்சரும்,  லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபாஹ்மி கூறினார்.

அடிமட்ட தொண்டர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் மதிபீட்டின் அடிப்படையில் இந்த முடிவு அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

உரிய நேரத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யப்போவதாக  நேற்று பந்தாய் டாலாம் ரமலான் சந்தைக்கு வருகை புரிந்த  பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

Menteri Komunikasi dan Ahli Parlimen Lembah Pantai, Datuk Fahmi Fadzil mengumumkan hasratnya bertanding jawatan Naib Presiden PKR pada pemilihan parti 24 Mei. Keputusan ini dibuat selepas perbincangan dengan pemimpin dan ahli parti serta berdasarkan maklum balas akar umbi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *