அப்பா ஆசையாய் வாங்கி கொடுத்த சைக்கிளில் மகன் - தாயார் விரல்கள் சிக்கின! - மீட்புக்குழுவால் விரல்கள் விடுவிப்பு

- Shan Siva
- 12 Apr, 2025
ஜாசின், ஏப்ரல் 12: மலாக்கா, ஜாசின், தாமான் மெர்லிமாவ்
பெர்மாயில் சைக்கிள் சங்கிலியில் இன்று ஒரு
சிறுவன் மற்றும் அவனின் தாயாரின் விரல்கள் சைக்கிள் சங்கிலியில் சிக்கிக்கொண்டது.
இதனை அடுத்து, காலை 9.39 மணிக்கு ஒரு
பேரிடர் அழைப்பைத் தொடர்ந்து ஐந்து தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு உடனடியாக சம்பவ
இடத்திற்கு அனுப்பப்பட்டதாக மெர்லிமாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய
செயல்பாட்டுத் தளபதி மூத்த தீயணைப்பு அதிகாரி முகமட் சுஃபியான்
அபு பக்கார் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு
வந்தவுடன், 32 வயது பெண்
மற்றும் அவரது ஆறு வயது மகன் ஆகியோரின் ஆள்காட்டி விரல்கள் சைக்கிள் சங்கிலியில்
சிக்கியிருப்பதைக் குழு கண்டறிந்ததாகவும், சுமார் ஐந்து
நிமிடங்களில் பாதிக்கப்பட்ட இருவரின் விரல்களையும் விடுவித்ததாகவும் அவர் ஒரு
அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள்
பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்லப்பட்டனர்.
தனது தந்தை
வாங்கிய புதிய மிதிவண்டியைப் பார்த்து உற்சாகமடைந்த சிறுவன் அதைத் தொட முயன்றபோது
இந்த சம்பவம் நிகழ்ந்ததாக முகமட் சுஃபியான் கூறினார்.
தனது மகனின்
விரல் சிக்கிய பிறகு தாய் உதவ முயன்றார், ஆனால் இறுதியில் தாயாரின் விரலும் சிக்கிக்கொண்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *