சொகுசு வாழ்க்கையைத் தேடி திவாலாகி விடாதீர்கள்!

- Muthu Kumar
- 10 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 10-
விரலுக்கேற்ற வீக்கம்' மட்டுமே இருக்க வேண்டும். மீறிப் போனால், ஆபத்துக்குள்ளாக நேரிடும். அதனால், பொதுச் சேவை ஊழியர்கள் தங்களின் வருமானத்திற்கு ஏற்பவே செலவு செய்ய வேண்டும் என்று, அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் வலியுறுத்தியுள்ளார்.
வருமானத்தையும் தாண்டி சொகுசான வாழ்க்கையை வாழ வேண்டிய சமூக நெருக்குதலுக்கு ஆளாகும் ஒருவர், அதிகப்படியான கடன்களைப் பெற்று, பின்னர் அதைச் செலுத்த முடியாமல் திவாலாகி விடக் கூடிய நிலை இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். “அரசாங்க நிதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வெள்ளியை” நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள சில அரசு ஊழியர்களினால்கூட, தங்களின் சொந்த நிதியை நிர்வகிக்க முடிவதில்லை என்று பகாங், பெக்கானில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது ஷம்சுல் தெரிவித்தார்.
“நமது வருமானத்துக்கு உட்பட்டே நாம்வாழவேண்டும். ஷியாவோமி கைத்தொலைபேசியை நம்மால் பயன்படுத்த முடியும் என்றால், ஐபோன் நமக்குத் தேவையில்லை."சில அரசாங்க ஊழியர்கள் ஆடம்பர வாழ்க்கையை நாடிச் செல்கின்றனர். பெரோடுவா மைவி காரை வாங்க அவர்களால் முடியும் என்றால், ஒரு தொயோத்தா வியோஸ் காரை ஓட்டிச் செல்ல முயலக் கூடாது" என்று ஷம்சுல் கூறியதாக பெரித்தா ஹரியான் தெரிவித்தது.
ஹஜ் யாத்திரையை மேற்கொள்வது மற்றும் வீடு வாங்குவதைத் தவிர்த்து, அதிகபட்சமாக ஓர் அரசாங்க ஊழியர் தமது மாதச் சம்பளத்தில் அவசியம் 40 விழுக்காடு வரையில் மட்டுமே கடன் பெற முடியும் என்று, பொதுச் சேவை அதிகாரிகள் நடத்தை மற்றும் விவரிப்பதாக ஷம்சுல் கூறினார்.
“இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டால், திவாலாகும் ஆபத்தைக் கட்டுப்படுத்த முடியும். நிதிப் பிரச்சினையை எதிர்நோக்கும் ஊழியர்களை, கடன் ஆலோசனை மற்றும் கடன் நிர்வாக நிறுவனத்துடனான ஆலோசனைக்கு அனுப்பி வைக்குமாறு இலாகாக்களின் தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
அதிகப்படியான வங்கிக் கடன்களின் விளைவால், பொதுச் சேவை ஊழியர்கள் திவாலானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக, திவால் இலாகா தலைமை இயக்குநர் பக்ரி மஜிட் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கூறியிருந்தார். “ஒரு பொதுச் சேவை ஊழியர் 7 லட்சம் வெள்ளி வரையில் கடன் பெற்று அதைச் செலுத்த முடியாத நிலையில் திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஒரு சம்பவத்தை நாங்கள் கையாண்டி இருக்கின்றோம்” என்றும் அவர் தெரித்திருந்தார்.
Ketua Setiausaha Negara menasihatkan penjawat awam berbelanja mengikut pendapatan bagi mengelakkan hutang berlebihan dan muflis. Beliau menekankan kepentingan pengurusan kewangan yang baik, termasuk had pinjaman 40% daripada gaji, bagi memastikan kestabilan kewangan dan kesejahteraan ekonomi mereka.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *