உலகின் தலைசிறந்த விமான நிலையம்: கேஎல்ஐஏக்கு 65ஆவது இடம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 11-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கேஎல்ஐஏ) உலகின் 65ஆவது தலைசிறந்த விமானநிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.ஸ்கைடிராக்ஸ் எனப்படும் விமானப் போக்குவரத்து தரநிர்ணய அமைப்பின் பட்டியலில் கேஎல்ஐஏ விமான நிலையத்திற்கு அந்த இடம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டுக்கான உலகின் 100 முதல்நிலை விமான நிலையங்கள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் ஆறு இடங்கள் முன்னேறி 65ஆவது இடத்தை கேஎல்ஐஏ பிடித்துள்ளது. கடந்தாண்டில் அதற்கு கிடைத்திருந்த இடம் 71ஆகும்.பார்சிலோனா, புடாபெஸ்ட் அடிலெய்ட் ஹம்பர்க். அட்லாண்டா ஆகிய விமான நிலையங்களை இம்முறை கேஎல்ஐஏ பின்னுக்குத் தள்ளியுள்ளது.

அப்பட்டியலில் முதலிடத்தைச் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் பெற்றுள்ளது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாங்கி விமான நிலையத்தின் தலைமைச் செயல் அதிகாரி யாம் கும் வெங் அந்த விருதைப் பெற்றுக் கொண்டார். ஆசியாவின் தலைசிறந்த விமான நிலையத்திற்கான விருதையும் அது வென்றது.

கத்தார் நாட்டின் ஹமாட் விமான நிலையம் இரண்டாவது இடத்தையும் ஜப்பானின் ஹனேடா விமான நிலையம் மூன்றாவது இடத்தையும் தென் கொரியாவின் இஞ்சியோன் விமான நிலையம் நான்காவது இடத்தையும் ஜப்பானின் நரித்தா விமான நிலையம் ஐந்தாவது இடத்தையும் பிடித்தன.

KLIA disenaraikan sebagai lapangan terbang ke-65 terbaik dunia oleh Skytrax, meningkat enam tangga dari tahun lalu. Singapura Changi di tempat pertama, diikuti Hamad (Qatar), Haneda (Jepun), Incheon (Korea), dan Narita (Jepun).

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *