செர்டாங் மாவட்ட போலீஸ் முன்னாள் தலைவர் எஸ்ஏசி ஏஏ அன்பழகன் பதவி உயர்வுபெற்றார்!

top-news
FREE WEBSITE AD

செர்டாங், ஏப். 17-

செர்டாங் மாவட்ட முன்னாள் போலீஸ் தலைவர் எஸ்ஏசி ஏஏ அன்பழகன் கெடா மாநிலத்தின் சிறப்பு போலீஸ் தலைவராக பதவி உயர்வு பெற்றார். செர்டாங் மாவட்டத்தில் சுமார் மூன்று ஆண்டு 10 மாத காலம் தமது சேவையை அவர் மேற்கொண்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு செர்டாங் மாவட்டத்தில் தமது சேவையை ஆரம்பித்த இவர் பல குற்றச்செயல்களையும் முறியடித்துள்ளார். குண்டர் கும்பல்களுக்கிடையே சண்டை, கார் திருட்டு, வாணிக குற்றச் செயல், போதைப் பொருள் தயாரிக்கும் கூடாரங்களை முறியடித்துள்ளார். மேலும் இந்த மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் மூவின மக்களின் பெருநாள்களை, ஆதரவற்ற இல்லங்களை நடத்தி அவர்களுக்கு தேவையான பொருட்களையும் வழங்கியுள்ளார்.


சமூக இயக்கங்கள், பள்ளிகள், ஆலயங்களுக்கு பல வகையில் செர்டாங் மாவட்ட போலீசார் சேவைகளை வழங்கியுள்ளார்.நேற்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் பொறுப்பை ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் பின் ஒமார்கான் கலந்து கொண்டார்.

செர்டாங் மாவட்ட இடைக்காலத் தலைவராக சூப்பிரிண்டென் ஷானாஸ் அத்தார் பின்ஹாஜி டத்தோ உசேன் தலைமையில் நியமனம் பெற்றார்.இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய எஸ்ஏசி ஏஏ அன்பழகன் கூறுகையில், நான் மூன்று ஆண்டு 10 மாத காலம் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவராக பதவியேற்று பொது மக்களுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் பல வகையில் சேவைகள் செய்துள்ளேன்.எனக்கு இதுவரையில் ஆதரவு வழங்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

போலீசார் முதலில் மக்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும். அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு போலீஸ் அதிகாரிகளை நம்பி வருகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கையாக கண்டிப்பாக உதவிகளைச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில், இதுவரையில் செர்டாங் மாவட்ட போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளை பத்திரிகைகளில் செய்தி வழியாக பிரசுவித்த தமிழ் மலர் பத்திரிகைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்துக்கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில பிரிக்கேட் தலைவி டத்தின் லிலியான ஹரியாத்தி செர்டாங் மாவட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளின் துணைவியார்களுக்கு மருத்துவ நிதி வழங்கினார்.

நிதி ஏற்பாடு செய்த செர்டாங் மாவட்ட முன்னாள் பிரிக்கேட் தலைவி அகிலா முத்தையா கூறுகையில், நம் மாவட்டத்திலுள்ள போலீஸ் அதிகாரிகள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்களுக்கு உதவுவதே எங்களுடைய நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள மாவட்ட போலீஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Di Serdang, bekas Ketua Polis Daerah Serdang, SAC AA Anbazhagan, telah dinaikkan pangkat sebagai Ketua Polis Istimewa Negeri Kedah. Sepanjang hampir empat tahun berkhidmat di Serdang, beliau berjaya menumpaskan pelbagai jenayah, termasuk gengsterisme, kecurian kereta, dan kegiatan jenayah lain. Beliau juga aktif dalam memberi bantuan kepada golongan memerlukan. Dalam majlis serah terima tugas, beliau mengucapkan terima kasih kepada anggota polis dan media, terutama akhbar Tamil Malar, atas sokongan yang diberikan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *