தூக்கத்திலும் புகையை உணர்ந்த தாய்... தீ விபத்தில் உயிர் தப்பிய குடும்பம்

- Shan Siva
- 16 Apr, 2025
பொந்தியான், ஏப்ரல் 16: பொந்தியானில் இன்று
அதிகாலை தனது வீட்டில் தீ பற்றியிருப்பதை புகை வாசனையை வைத்து உணர்ந்த அமினா அகமது எனும் 84 வயது முதிய பெண்மணி தன்னையும் தனது
இரண்டு மகன்களையும் காப்பாற்றிக் கொள்ள சரியான நேரத்தில் விழித்து தப்பித்தார்.
புகையின் வாசனையை
உணர்ந்து தாம் விழித்ததாகவும், வீடு ஏற்கனவே
அடர்த்தியான புகையால் நிரம்பியிருப்பதைக் கண்டதாகவும் அவர் கூறினார். உடனடியாக தனது
இரண்டு மகன்களையும் எழுப்பினேன். உடனே வெளியே ஓடி வந்துவிட்டோம் என அவர் கூறினார்.
சம்பவத்தில் அவர்
உயிர் பிழைத்த போதிலும், தனது மறைந்த
கணவரின் நகைகள் மற்றும் பணம் தீயில் எரிந்ததால், அமினா RM36,000 க்கும் அதிகமான இழப்பைச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை
நன்கொடைகளிலிருந்து சேமிக்கப்பட்ட பணத்தை, தினசரி செலவுகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக தனது கைப்பையில்
வைத்திருந்ததாக அமினா கூறினார்.
RM30,000 க்கும் அதிகமான
மதிப்புள்ள தங்க நகைகள், ஒரு மீனவரான அவரது மறைந்த
கணவருக்கு வழங்கபப்ட்டது.
எல்லாவற்றையும்
இழந்திருந்தாலும், தாங்கள் இன்னும்
உயிருடன் இருப்பதற்கு நன்றி கூறுவதாக அவர் கண்ணீருடன் கூறினார்.
இந்த தீ விபத்தில் இரண்டு வீடுகள் பாதிக்கப்பட்டன, அவற்றில் ஒன்று 90 சதவீதம் எரிந்து நாசமானது. நான்கு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Amina Ahmad, wanita berusia 84 tahun, berjaya menyelamatkan diri dan dua anaknya dari kebakaran rumah awal pagi. Namun, dia mengalami kerugian RM36,000 termasuk wang tunai dan barang kemas. Dua rumah rosak, punca kebakaran masih disiasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *