தனிநபரை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டை மறுத்த நான்கு ஆடவர்கள்!

top-news
FREE WEBSITE AD

ஜோர்ஜ்டவுன். ஏப். 10-

கடந்த மாதம், தனிநபர் ஒருவரை மிரட்டி 18,000 ரிங்கிட்டைப் பறித்ததாக, தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நான்கு ஆடவர்கள். நேற்று முன்தினம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினர்.
கடந்த மாதம் மார்ச் 21ஆம் தேதி. பினாங்கு, குளுகோர், டெசா ஆயர் மாசில் பிற்பகல் மணி 12.30க்கு வேண்டுமென்றே மிரட்டி பணம் பறித்ததாக, பி.வீரன். எஸ்.ரொஹன் ராஜ், எல்.யுவராஜன். எஸ். சிவா ஆகிய நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் செக்ஷன் 384. அதே சட்டம் செக்ஷன் 34 இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது அதில் ஏதேனும் இரண்டு தண்டனைகள் விதிக்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஆடவர்களுக்கும் தலா 7,000 ரிங்கிட் ஜாமீன் தொகை மற்றும் வழக்கு தீர்க்கப்படும் வரை பாதிக்கப்பட்டவரை அணுக வேண்டாம் என்ற கூடுதல் நிபந்தனைகளுடன் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க மாஜிஸ்திரேட் முஹமட் அஸ்லான் பஸ்ரி அனுமதியளித்தார்.ஆவணங்களைச் சமர்ப்பிக்க, இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு. இம்மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Empat lelaki didakwa di Mahkamah Majistret atas tuduhan memeras ugut RM18,000 pada 21 Mac lalu di Desa Ayer Mas, Pulau Pinang. Mereka mengaku tidak bersalah dan dibebaskan dengan jaminan RM7,000 setiap seorang serta dilarang hubungi mangsa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *