இறைச்சி அறுக்கும் எந்திரத்தில் சிக்கிய கை! இளைஞர் படுகாயம்

- Shan Siva
- 17 Apr, 2025
ஈப்போ, ஏப்ரல் 17: இறைச்சி அறுக்கும் இயந்திரத்தில் வலது கை
சிக்கியதால் 26 வயது நபர்
ஒருவர் பலத்த காயமடைந்தார்.
செவ்வாய்க்கிழமை
பிற்பகல் 2 மணியளவில் ராஜா
பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையிலிருந்து சிறப்பு உதவி அழைப்பு வந்ததாக ஈப்போ
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, அதன் பேஸ்புக்
பக்கத்தில் கூறியது.
இதனை அடுத்து ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிறப்பு மீட்புப் படை
மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இறைச்சி அறுக்கும்
இயந்திரத்தில் கை சிக்கியதால் பாதிக்கப்பட்டவரின் வலது கையில் பலத்த காயம்
ஏற்பட்டது.
இந்நிலையில் தீயணைப்பு
வீரர்கள் ஒரு கட்டர் உள்ளிட்ட சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி கிரைண்டரை அகற்றி,
பாதிக்கப்பட்டவரின் கையைப் பாதுகாப்பாக
மீட்டனர்.
பின்னர் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்!
Ipoh, seorang lelaki berusia 26 tahun mengalami kecederaan serius pada tangan kanannya apabila terperangkap dalam mesin pemotong daging. Kejadian berlaku sekitar jam 2 petang dan pasukan bomba dari Ipoh dihantar ke lokasi kejadian. Menggunakan peralatan khas seperti pemotong, anggota bomba berjaya mengeluarkan tangan mangsa dengan selamat sebelum menghantarnya untuk rawatan lanjut di hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *