பக்காத்தானும் பாரிசானும் தேர்தல் கூட்டணியா! முடிவு எடுக்கிறோம்! - Anthony Loke

- Sangeetha K Loganathan
- 15 Apr, 2025
ஏப்ரல் 15,
ஒற்றுமை கூட்டணி எனும் அடையாளத்துடன் பாரிசானும் பக்காத்தானும் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்குமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என டி.ஏ.பி கட்சியின் பொதுச் செயலாளர் Anthony Loke இன்று தெரிவித்தார். சபாவில் மாநிலங்கவைச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பக்காத்தானுடனானக் கூட்டணிக்குப் பாரிசான் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவந்த செய்தி குறித்து விரைவில் ஒற்றுமை கூட்டணியின் தலைமையில் விவாதிப்போம் என Anthony Loke தெரிவித்தார்.
ஒற்றுமைக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் கலந்துரையாடலுக்குப் பின்னர் பொதுத்தேர்தலிலும் மாநிலங்கவைச் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை, உட்காந்து பேசினால் பதில் தெரியும் என Anthony Loke தெரிவித்தார். தேர்தல் கூட்டணிக் குறித்தான ஒற்றுமை கூட்டணியின் தலைமை கூட்டம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் விரைந்து முடிவுகள் எடுக்கிறோம் என்றும் Anthony Loke தெரிவித்தார்.
Anthony Loke menyatakan keputusan mengenai sama ada Pakatan Harapan dan Barisan Nasional akan bekerjasama dalam pilihan raya akan datang akan dibuat tidak lama lagi. Perbincangan bersama pimpinan gabungan akan menentukan hala tuju kerjasama politik tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *