Songkran கொண்டாட்டம் இஸ்லாத்திற்கு எதிரானது! தடை செய்யும்படி பாஸ் கட்சி வலியுறுத்து!

top-news

ஏப்ரல் 10,

கோடை காலக் கொண்டாட்டங்களில் ஒன்றான Songkran கொண்டாட்டத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என பாஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. Songkran கொண்டாட்டம் இஸ்லாத்திற்கு எதிரான ஒரு கொண்டாட்டம் என்பதால் பினாங்கில் நடத்தப்படவிருக்கும் Songkran கலை நிகழ்ச்சியைத் தடை செய்யும்படி பினாங்கு மாநிலப் பாஸ் கட்சி தகவல் பிரிவு தலைவர் Muhammad Fawwaz Mohamad Jan இன்று வலியுறுத்தினார். 

எதிர்வரும் 12, 13 ஏப்ரல் Ferringhi Heart Beach Club எனும் நிறுவனம் Sonic Splash Songkran Music Beach Party எனும் பெயரில் Songkran கலை நிகழ்ச்சியைப் பினாங்கில் நடத்துவதாக வெளிவந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டிய Muhammad Fawwaz Mohamad Jan அறை குறை ஆடைகளுடன் பொதுவில் சுற்றித் திரிவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். உடனடியாக மலேசியாவில் Songkran கொண்டாட்டத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படவிருக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை அடையாளம் கண்டு, அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என பினாங்கு மாநிலப் பாஸ் கட்சி தகவல் பிரிவு தலைவர் Muhammad Fawwaz Mohamad Jan தெரிவித்தார்.

PAS Pulau Pinang mendesak kerajaan mengharamkan perayaan Songkran di Malaysia kerana didakwa bertentangan dengan ajaran Islam. Muhammad Fawwaz Mohamad Jan menolak sambutan perayaan Songkran di Pantai Ferringhi kerana pakaian tidak sopan dan bertentang dengsn unsur tidak Islam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *