இடைத்தேர்தலின் போது மட்டும் மக்களைச் சந்திக்கும் அரசாங்கம்! பாஸ் கட்சி சாடல்!

top-news

ஏப்ரல் 16,

AYER KUNING சட்டமன்ற இடைத்தேர்தலில் அரசாங்கம் பாரிசானுக்கு ஆதரவாகப் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதாகப் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Dato’ Sri Tuan Ibrahim Tuan Man குறிப்பிட்டார். பல வருடங்களாக உள்ளூர் பச்சரிசை பற்றாக்குறையாக இருந்த நிலையில் தற்போது திடீரென AYER KUNING கடைகளில் உள்ளூர் அரிசிகளின் நிறைந்து கிடக்கின்றன என்றும், கோழி மீன்கள் எல்லாம் கிலோ 5 ரிங்கிட்டுக்குக் கிடைப்பது ஆச்சரியமாக இருக்கிறது என Tuan Ibrahim Tuan Man விமர்சித்துள்ளார். 

இடைத்தேர்தல்களில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரிடம் என்ன கேட்டாலும் கிடைக்கும். ரோடு கேளுங்கள். பாலம் கேளுங்கள். பாலம் கட்ட ஆறுகள் இல்லை என்றாலும் பரவாயில்லை, ஆறுகளை உங்கள் வீட்டுக்கு அருகில் அமைக்கும்படியும் கேளுங்கள். அரசாங்கம் செய்யும். ஆனால் இந்த வசதிகள் எல்லாம் இடைத்தேர்தல் முடியும் வரையில் மட்டுமே அரசாங்கம் செய்யும் என Tuan Ibrahim Tuan Man அரசாங்க நலத்திட்டங்களைக் கடுமையாகச் சாடினார். மடானி அரசாங்கம் ஊழலை ஒழிப்பதாக ஒப்பாரி வைத்தாலும் தேர்தலின் போது நடத்தப்படும் இதுமாதிரியானத் தேர்தல் ஊழல்களின் போது கண்களை மூடிக்கொள்ளும் என Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார்.

PAS mengkritik kerajaan kerana hanya melaksanakan program kebajikan rakyat semasa pilihan raya kecil. Timbalan Presiden PAS, Dato’ Sri Tuan Ibrahim, menyatakan kemudahan seperti beras tempatan dan harga murah ayam hanya muncul menjelang pilihan raya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *