தேர்தலில் இஸ்லாமியர்கள் நியாயமானத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்! பாஸ் கட்சி வலியுறுத்து!

top-news

ஏப்ரல் 20,

Ayer Kuning சட்டமன்ற இடைத்தேர்தலில் இஸ்லாமியர்களின் நியாயமானத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என பாஸ் கட்சியின் தலைவர் Tan Sri Abdul Hadi Awang வலியுறுத்தினார். தகுதியானத் தலைவர்களால் மட்டுமே இஸ்லாமியர்கள் வழிநடத்தப்பட வேண்டும். அந்த தகுதி என்பது இன மத பின்னணியை மட்டுமே கொண்டதாக இல்லாமல் உண்மையாக மக்களுக்காக நன்மைகளை வழங்கும் தலைவராக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என Tan Sri Abdul Hadi Awang தெரிவித்தார். 

நாட்டின் இறையாண்மை மதத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலானச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இஸ்லாத்திற்கும் நாட்டிற்கும் எதிரிகளாகவே நாம் கருத வேண்டும் என்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தகுதியான இஸ்லாமியர் யார் என்பதை உணர்ந்து Ayer Kuning இஸ்லாமியர்கள் வாக்களிக்க வேண்டும் என பாஸ் கட்சியின் தலைவர் Tan Sri Abdul Hadi Awang வலியுறுத்தினார்.

PAS menekankan agar umat Islam memilih pemimpin yang adil dan berkelayakan dalam Pilihan Raya Kecil DUN Ayer Kuning. Tan Sri Abdul Hadi Awang menyatakan hanya pemimpin berprinsip Islam sejati mampu memimpin dan mempertahankan kedaulatan agama dan negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *