துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்ட காவல் அதிகாரி!

- Sangeetha K Loganathan
- 09 Apr, 2025
ஏப்ரல் 9,
காவல் அதிகாரி ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பினாங்கு மாநிலக் காவல் நிலையத்தில் பணியாற்றும் 58 வயது காவல் அதிகாரி பணியின் போது தனது கைத்துப்பாக்கியைக் கொண்டு தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்டதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 4 மணிக்கு வேலை முடிந்தும் வீடு திரும்பாத அவர் மாலை 6 மணி வரையில் பணியிடத்திலேயே இருந்ததாகவும் மாலை 6 மணிக்குக் காவல் நிலையத்தின் வாசலில் தன்னைத் தானே தலையில் சுட்டுக்கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரி மன உறுதியோடு இருந்தாரா என்றும் சம்பவத்திற்கான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang pegawai polis berusia 58 tahun dari Pulau Pinang menimbulkan kejutan apabila menembak dirinya sendiri di kepala menggunakan pistol di balai polis selepas tamat tugas. Beliau kini dirawat di hospital dan siasatan lanjut sedang dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *