போலி முதலீட்டில் RM379,200 இழந்த வங்கி ஊழியர்!

- Sangeetha K Loganathan
- 23 Apr, 2025
ஏப்ரல் 23,
அதிக லாபம் பெறும் முயற்சியில் போலி முதலீட்டில் RM379,200 பணத்தை வங்கியில் பணிபுரியும் பெண் பணியாளர் இழந்துள்ளதாக Seberang Perai Tengah மாவட்டக் காவல் ஆணையர் Helmi Aris தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 11 ஆம் திகதி தெரியாத நபரிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் பாதுகாப்பான முதலீடுகளில் சேமிப்புப் பணத்தை முதலீடு செய்யும்படி வலியுறுத்தியதும் XGI Horizon Pro எனும் முதலீட்டு நிறுவனத்தில் RM10,000 முதலீடு செய்தததும் 3 மணிநேரத்தில் RM1.6 மில்லியன் லாபம் பெற்றதால் லாபம் பெற்ற பணத்தைத் திரும்பப் பெற கொஞ்சம் கொஞ்சமாகத் தனது சேமிப்புப் பணத்தைச் செலுத்தியும் லாப பணத்தைப் பெறாத நிலையில் நேற்று இரவு பாதிக்கப்பட்ட 48 வயது பெண் வங்கி ஊழியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையில் 6 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 18 பரிவர்த்தனைகள் மூலமாக RM379,200 பணத்தைப் பாதிக்கப்பட்டவர் இழந்துள்ளதாக Seberang Perai Tengah மாவட்டக் காவல் ஆணையர் Helmi Aris தெரிவித்தார். பாதிக்கப்பட்டவரின் பணத்தை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டிருப்பதாகவும் சம்மந்தப்பட்ட வங்கிக் கணக்குகளின் மூலமாக மோசடி கும்பலைத் தேடி வருவதாகவும் Seberang Perai Tengah மாவட்டக் காவல் ஆணையர் Helmi Aris தெரிவித்தார்.
Seorang pekerja bank berusia 48 tahun kerugian RM379,200 akibat pelaburan palsu dengan janji pulangan tinggi. Mangsa terpedaya selepas menerima pulangan awal dan membuat 18 transaksi ke enam akaun bank dari Februari hingga April.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *