துருப்பிடித்த படிக்கட்டுக் கம்பியால் மாணவிக்குக் காயம்! கல்வி இலாகா விசாரணை!

- Sangeetha K Loganathan
- 23 Mar, 2025
மார்ச் 23,
இடைநிலைப்பள்ளி மாணவி படியில் இறங்கும் போது படியிலிருந்த துருப்பிடித்த கம்பி கிழித்து காயமடைந்த விவகாரம் தொடர்பாக மாநிலக் கல்வி இலாகா நடவடிக்கை எடுக்கவிருப்பதாகப் பேராக் மாநிலக் கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் Khairudin Abu Hanipah தெரிவித்துள்ளார்.
சம்மந்தப்பட்ட இடைநிலைப்பள்ளிக்குத் தமது சிறப்பு அதிகாரிகள் நேரில் வருகையளித்துள்ளதாகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் பகுதிகளைச் சோதனையிட்டு வருவதாகவும் சம்மந்தப்பட்ட பள்ளியின் சில பகுதிகளை மறுசீரமைப்புச் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் Khairudin Abu Hanipah தெரிவித்தார். மேலும் பேராக்கில் உள்ள கல்விக் கூடங்களில் ஆபத்தான முறையில் இருக்கும் பகுதிகளையும் சோதனையிடவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
Seorang pelajar sekolah menengah cedera akibat tertusuk besi berkarat pada tangga. Jabatan Pendidikan Negeri Perak akan menyiasat insiden tersebut dan mengarahkan pemeriksaan serta kerja-kerja pembaikan di sekolah terbabit serta institusi lain yang berpotensi berbahaya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *