நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் பலி!

top-news

மார்ச் 16,

அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 17 வயது இடைநிலைப்பள்ளி மாணவர் உயிரிழந்தார். ஈப்போ மேருவில் உள்ள அடுக்குமாாடிக் குடியிருப்புப் பகுதியில் உள்ளவர்கள் இரவு 9.22 மணிக்கு அவசர அழைப்பின் வாயிலாகத் தகவல் தெரிவித்த நிலையில் பேராக் மாநில மீட்பு ஆணையத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் பேராக் மாநில மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். 

உயிரிழந்த மாணவர் சீனா நாட்டைச் சேர்ந்த 17 வயது மாணவர் என்றும் மேருவில் உள்ள அனைத்துலகப் பள்ளியில் படிவம் 5 பயிலும் மாணவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரின் உடல் நீச்சல் குளத்தின் 1.2 மீட்டர் ஆழத்திலிருந்து மீட்கப்பட்டதாகப் பேராக் மாநில மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். 

Seorang pelajar lelaki warga China berusia 17 tahun ditemui lemas di kolam renang sebuah kondominium di Meru, Ipoh. Pasukan penyelamat menerima panggilan kecemasan pada 9.22 malam dan menemui mangsa di dasar kolam sedalam 1.2 meter.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *