கல்லூரி பேருந்து மோதி மாணவி பலி!

top-news

ஏப்ரல் 20,

கெடாவில் உள்ள வடமலேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழக மாணவியான 22 வயது Manarina Hasya Muhamad Karim உயிரிழந்தார். இன்று காலை 8.45 மணிக்கு இவ்விபத்துக் குறித்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Kubang Pasu, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Radzi Abdul Rahim தெரிவித்தார்.

நின்றுக் கொண்டிருந்த பேருந்தின் பின் பகுதியை மற்றொரு பேருந்து மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும் பேருந்திந் முன் நின்றுக் கொண்டிருந்த 22 வயது மாணவியைப் பேருந்து மோதியதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மாலை 6.30 மணிக்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் Kubang Pasu, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Radzi Abdul Rahim தெரிவித்தார். விபத்துக் குறித்தான மேலதிக விசாரணைக்காக இரு பேருந்து ஓட்டுநர்களும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kedua-dua bas kolej bertembung di kampus Universiti Utara Malaysia menyebabkan seorang pelajar wanita, Manarina Hasya, 22 tahun, maut akibat kecederaan parah. Polis menahan dua pemandu bas bagi siasatan lanjut berhubung kemalangan tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *