கடல் சாகசத்தின் போது மூழ்கி உயிரிழந்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணி!

top-news

மார்ச் 10,

Pulau Mabul பகுதியில் உள்ள கடல் சாகசம் செய்வதற்கான “டைவிங்” செய்த வெளிநாட்டுச் சுற்றுலா பயணி நீரில் மூழ்கி உயிரிழந்தார். பிற்பகல் 2.36 மணிக்கு ஆடவர் ஒருவர் கடலில் மூழ்கியதாக அவசர அழைப்பைப் பெற்றதாக Semporna, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sabri Zainol தெரிவித்தார். காலை 10.50 மணியளவில் Pulau Mabul கடலின் 12 மீட்டர் ஆழத்துக்குள் “டைவிங்” செய்வதற்காக அவர் அழைத்து செல்லப்பட்ட நிலையில் 12.30 மணிக்கு “டைவிங்” செய்ய சென்ற அனைவரும் கரைக்குத் திரும்பியும் 34 வயது வெளிநாட்டு ஆடவர் மட்டும் கரைக்குத் திரும்பவில்லை என ‘டைவிங்’ குழுவினர் தெரிவித்ததாக Mohd Sabri Zainol தெரிவித்தார்.

அதன்பின்னர் மீட்புப் படையினர் சம்மந்தப்பட்ட கடல் பகுதியில் தேடுதல் பணியை மேற்கொண்ட நிலையில் கடலின் மேல் அவரின் உடல் மிதந்ததாகவும் செம்பூர்ணா மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்திய நிலையில் வெளிநாட்டு ஆடவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் Semporna, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sabri Zainol தெரிவித்தார்.

Seorang pelancong warga China disyaki lemas ketika menyelam di perairan Pulau Mabul. Mangsa ditemui terapung oleh jurulatih selam sebelum disahkan meninggal dunia di Hospital Semporna. Polis mengklasifikasikan kes sebagai mati mengejut dan meminta waris tampil menuntut jenazah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *