தாறுமாறாக வாகனத்தைச் செலுத்திய இளைஞர் கைது!

- Sangeetha K Loganathan
- 16 Apr, 2025
ஏப்ரல் 16,
சாலையில் HILUX வாகனம் கட்டுப்பாடு இல்லாமல் ஆபத்தான முறையில் செல்லும்படியாகவும் பொதுமக்களால் தாக்குதலுக்குள்ளாகும்படியாகவும் வெளியானக் காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட வாகனமோட்டி அன்றைய இரவே கைது செய்யப்பட்டதாகத் தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் RAUB SELAMAT தெரிவித்தார். கடந்த 15 ஏப்ரல் இரவு 8.50 மணிக்கு TRITON HILUX ரக வாகனம் சாலை விதிகளை மீறி குறுக்கு வழியில் சென்றதாகவும் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரி நிறுத்தியதால் கோபப்பட்ட வகனமோட்டி பின்னிருந்த வாகனங்களை மோதி தப்பிக்க முயற்சிக்கும் போது மோட்டார் சைக்கிளோட்டிகளை மோதியதால் மோட்டார் சைக்கிளோட்டிகள் வாகனத்தைத் தாக்கியதாகவும் RAUB SELAMAT தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட HILUX வாகனமோட்டியை அடையாளம் கண்ட காவல் அதிகாரிகள் துரத்திச் சென்று கைது செய்ததாக அவர் தெரிவித்தார். வாகனத்திலிருந்து கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர் 27 வயது உள்ளூர் இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 27 வயது இளைஞர் 8 முந்தைய குற்றங்களுக்காகத் தேடப்படும் நபர் என்றும் போதைப்பொருள் வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகவும் தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் RAUB SELAMAT தெரிவித்தார்.
Seorang pemuda tempatan berusia 27 tahun ditahan selepas memandu Hilux secara berbahaya dan melanggar undang-undang lalu lintas. Polis menemui senjata tajam dalam kenderaan, dan suspek mempunyai 8 rekod jenayah lampau serta kes dadah tertunggak.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *