JPJ அதிகாரியுடன் வாக்குவாதம்! லாரியைச் சாலையின் நடுவே நிறுத்திய ஓட்டுநர்!

top-news

ஏப்ரல் 19,

போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறையினரின் சோதனையிலிருந்து தப்பிக்க லாரியை நடுரோட்டிலேயு நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் JPJ அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் காவல் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூலிம் மாவட்டக் காவல் ஆணையர் ZULKIFLI AZIZAN தெரிவித்தார். 

 நண்பகல் 1.11 மணிக்குக் கூலிம் SULTANAH சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் அதிக எடையின் காரணமாக JPJ சோதனைக்கு இணங்க மறுத்த 38 வயது லாரி ஓட்டுநர் சாலையின் நடுவே TRELER லாரியை நிறுத்தியதால் பெரும் சாலை நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட TRELER லாரியில் கட்டுப்படுத்தப்பட்ட எடையை விடவும் அதிகமான எடையில் பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் லாரியி்ா சக்கரங்கள் கட்டுப்படுத்தப்பட்ட அளவை விடவும் பெரிதாக இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூலிம் மாவட்டக் காவல் ஆணையர் ZULKIFLI AZIZAN தெரிவித்தார். 

Seorang pemandu treler di Kulim bertindak mengunci pintu dan mematikan enjin kenderaan selepas diarahkan JPJ untuk ditimbang. Dia disyaki membawa muatan lebih had dan melakukan beberapa kesalahan lain. Saman telah dikeluarkan terhadapnya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *