போலி முதலீட்டில் RM 183,326 இழந்த இளைஞர்!

top-news

ஏப்ரல் 21,

அதிக லாபம் பெற எண்ணிய 30 வயது இளைஞர் முறையான அங்கீகாரம் பெறாத நிறுவனத்தில் முதலீடு செய்ததில் RM 183,326 பணத்தை இழந்துள்ளதாக TEMERLOH மாவட்டக் காவல் ஆணையர் MAZLAN HASSAN தெரிவித்தார். GLOBAL SOLARIS எனும் பதிவு செய்யப்படாத நிறுவனத்தில் விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட அவர் தனது குடும்பத்தின் சேமிப்புப் பணம் மொத்தத்தையும் இழந்துள்ளதாகவும் நேற்று மாலை புகார் அளித்த நிலையில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் TEMERLOH மாவட்டக் காவல் ஆணையர் MAZLAN HASSAN தெரிவித்தார்.


பாதிக்கப்பட்ட இளைஞர் TIKTOK மூலமாகப் பெற்ற விளம்பரத்தை நம்பி 10 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 24 முறை பணத்தைப் பரிவர்த்தனை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலீடு செய்த பணத்தின் மூலமாக லாபம் பெற்ற பணத்தை மீண்டும் பெற முயற்சிக்கும் போது கூடுதல் தொகை செலுத்தும்படி வற்புறுத்தப்பட்டதால் நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக TEMERLOH மாவட்டக் காவல் ஆணையர் MAZLAN HASSAN தெரிவித்தார்.

Seorang pemuda berusia 30 tahun kerugian RM183,326 selepas melabur dalam syarikat tidak berdaftar, Global Solaris, yang dikenalinya melalui TikTok. Polis Temerloh telah membuka kertas siasatan susulan laporan yang dibuat oleh mangsa semalam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *