காஜாங்கில் 288 வெளிநாட்டினர் கைது!

top-news

ஏப்ரல் 11,

வெளிநாட்டிலிருந்து மலேசியாவுக்குச் சட்டவிரோதமாகக் குடியேறிய 288 பேர் நேற்றிரவு தேசியக் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு 7.30 மணிக்குக் காஜாங்கில் உள்ள பேருந்து நிலையத்தின் வணிக வளாகங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் இச்சோதனையை மேற்கொண்டதாகத் தேசியக் குடிநுழைவுத் துறையின் உதவி இயக்குநர் Jafri Embok Taha தெரிவித்தார். அதிகமான வெளிநாட்டினர்களின் நடமாட்டம் இருப்பதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Bangladesh, Indonesia, Myanmar, Vietnam, Pakistan, Nepal, India, Sri Lanka, Sudan ஆகிய நாடுகளைச் சேர்ந்த 785 வெளிநாட்டினர்களிடம் சோதனையை மேற்கொண்டதாகவும் 242 ஆண்களும் 46 பெண்களும் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்ததாகக் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களைக் கைது செய்ததாகவும் Jafri Embok Taha தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 60 வயதுக்குற்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 288 வெளிநாட்டினர்களும் SEMENYIH குடிநுழைவுத் துறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தேசியக் குடிநுழைவுத் துறையின் உதவி இயக்குநர் Jafri Embok Taha தெரிவித்தார்.

Bus terminal Kajang diserbu Jabatan Imigresen dan 288 pendatang asing tanpa izin ditahan. Mereka berasal dari sembilan negara termasuk Bangladesh dan Indonesia. Pemeriksaan dibuat selepas aduan awam. Kesemua tahanan berusia 18 hingga 60 tahun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *